பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டத்தின் போது தண்டவாளத்தில்நின்று ராவணவதம் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படகாயமடைந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் ரயில் விபத்தால் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய இரயில்வே அதிகாரப்பூர்வ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பதாவது:
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ரயில் மோதி இறந்தவர்களின் எண்ணிக்கை 49,790 ஆகும். அதில் அதிகப்படியான விபத்து வடக்கு ரெயில்வே மண்டலத்தில் நடந்துள்ளது. வடக்கு ரெயில்வே மண்டலத்தில் 7,908 பேர் இறந்துள்ளனர். தெற்கு ரெயில்வே மண்டலத்திலிருந்து 6,149 பேரும், கிழக்கு ரயில்வே மண்டலத்திலிருந்து 5,670 பேர் இறந்துள்ளனர்.
இந்தியன் இரயில்வே காவல்துறையினர் இந்த விபத்துகள் குறித்து விரிவான தகவல்களை மண்டல வாரியாக அளித்துள்ளனர். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Discussion about this post