திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆசிரியரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஆயுத பூஜை விடுமுறைக்கு முன்பாக கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து இன்று காலை பள்ளி திறந்ததும் 150க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, ஆசிரியரை மாணவியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, தலையில் பலத்த காயத்துடன் செங்கம் அரசு மருத்துவமனையில் ஆசிரியர் கண்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post