அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில், மக்களவை துணை தலைவர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு செய்தியாளர் அமைச்சர் ஜெயக்குமார் பாலியல் புகார் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தம்பிதுரை, அய்யோ அமைச்சர் ஜெயக்குமார் அப்படியெல்லாம் செய்ய மாட்டார். அவர் ரொம்ப நல்ல மனுசன் என்றார். மேலும், அந்த ஆடியோ குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் தம்பிதுரை கேட்டுக்கொண்டார். மேலும், மற்றொரு செய்தியாளர் அந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, தம்பி வேற கேள்வி இருந்த கேளுங்க என காண்டானா தம்பிதுரை வேகமாக சென்றார்.
Discussion about this post