பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைகளை தைரியமாக சொல்ல மீ டூ என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில், செக்ஸ் கொடுமையால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் கூறி வருகின்றனர். இதில், கவிஞர் வைரமுத்து, நானா படேகர், அமைச்சர் ஜெயக்குமார், நடிகர்கள் அர்ஜூன், சிம்பு, தியாகராஜன் உள்ளிட்ட பலர் செக்ஸ் புகாரில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், மீ டூ’ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிப்பதாக இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தை கொடுத்துள்ளதாகவும் சினிமாதுறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார், பாதிக்கப்பட்டவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் போது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post