ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் ஸ்ரேயா. தற்போது திருமணம் முடிந்த நிலையில், அரவிந்த சாமிக்கு ஜோடியாக நரகாசுரன் படத்தில் நடித்துள்ளார். மேலும், பெண் இயக்குனின் தெலுங்கு படம் ஒன்றில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரேயா, சினிமா என்பது ஆணாதிக்கம் மிக்க துறை என்பதை மறுக்கவில்லை என்றும் அப்படிப்பட்ட துறையில் பெண்கள் இயக்குனர்களாவதை பார்க்க பெருமையாக உள்ளதாகவும் கூறினார். திருமண வாழ்க்கை எப்படி உள்ளது என்று மட்டும் என்னிடம் கேட்க வேண்டாம் என்றும் அது என் தனிப்பட்ட வாழ்க்கை எனவும் தெரிவித்த ஸ்ரேயா, திருமண வாழ்க்கை விற்பனைக்கு அல்ல என்றார்.
Discussion about this post