அமைச்சர் ஜெயக்குமாரை குற்றஞ்சாட்டும் வகையில் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று உலவிக் கொண்டு இருக்கிறது. அந்த ஆடியோவில், தனது மகள் கர்ப்பமாக இருப்பதாகவும் கர்ப்பத்தை கலைக்க மருத்துவமனைக்கு போனால், அப்பா யார் என மருத்துவர் கேட்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒரு பெண் பேசுகிறார். அதற்கு மருத்துவரிடம் பேசி கர்ப்பத்தை கலைக்க தான் உதவுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது போல் உள்ளது.
மேலும், எதையும் போனில் பேச வேண்டாம், அன்று நேரில் வந்த இடத்திற்கு வந்து தனக்கு போன் பண்ணுங்க என அந்த ஆடியோவில் உள்ளது. இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், வாட்ஸ் ஆப் ஆடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும் இது டிடிவி தினகரனின் திட்டமிட்ட செயல் எனவும் கூறினார். என்னை நேரடியாக எதிர்க்க திராணி இல்லாதவர்கள் போலியான ஆடியோவை தயார் செய்து வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Discussion about this post