சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சாமிவேல். இவரது மகள் ராஜலட்சுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது தோட்டத்தின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் ரிக் வண்டி தொழிலாளி தினேஷ்குமார். இந்நிலையில், அரை நிர்வாணத்துடன் ஓடி வந்த தினேஷ்குமார், ராஜலட்சுமி தனது தாய் சின்னபொண்ணுவை எட்டி உதைத்துள்ளார். பின்னர், ராஜலட்சுமியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிய தினேஷ் குமார், ராஜலட்சுமியின் தலையை துண்டித்து, அதை எடுத்துச் சென்று சாலையில் வீசியுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிதறியடித்து ஓடினர். இதனைதொடர்ந்து, ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தினேஷ்குமார் சரணடைந்தார். கொலையாளி சைகோவாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இரண்டரை வயது மகன் செல்வதரனீஷை தினேஷ்குமார் கழுத்து நெரித்து கொலை செய்ய முயன்றதும் தெரிய வந்தது.
Discussion about this post