சீனாவில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான கடற்பாலம் பாலம் இன்று திறக்கப்படுகிறது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மெக்காவ் மற்றும் தன்னாட்சி பிரதேசமான ஹாங்காங் பகுதிகளை சீனாவின் சுகாய் நகருடன் இணைக்கும் வகையில் தென்சீனக்கடலில் 55 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது.
20 பில்லியன் டாலர் (சுமார் 1.40 லட்சம் கோடி) செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலப்பணிகள் 2016-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டது.
நீண்ட நாள் தாமதத்துக்குப்பின் அந்த பாலம் இன்று திறக்கப்படுகிறது. இதற்காக சுகாய் நகரில் நடைபெறும் விழாவில் சீன அதிபர் ஜிஜின்பிங் மற்றும் ஹாங்காங், மெக்காவ் பகுதிகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த பாலத்தில் நாளை முதல் வாகன போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
உலகின் மிக நீண்ட கடற்பாலமாக கருதப்படும் இந்த பாலம் தென்சீனக்கடலில் சுமார் 56,500 சதுர கி.மீ. பகுதியையும், அதை சூழ்ந்துள்ள 11 நகரங்களையும் உள்ளடக்கி இருக்கிறது.
இந்த பாலத்தால் 11 நகரங்களுக்கும் சென்றடையும் பயண நேரம் 3 மணியில் இருந்து வெறும் 30 நிமிடங்களாக குறையும். இந்த பாலத்துக்கு மிகுந்த வரவேற்பு இருந்தாலும், தன்னாட்சி பகுதியாக ஹாங்காங் மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. சீனா தனது ஆதிக்கத்தை தங்கள் மீது வலிந்து திணிப்பதாக ஹாங்காங் மக்கள் நினைக்கிறார்கள். ஏனெனில் 1999ம் ஆண்டு வரை ஹாங்காங் பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இதனால் அந்த நகரம் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. 1999ம் ஆண்டுக்குப்பிறகு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், தன்னாட்சி பகுதியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சீனா சர்வாதிகாரத் தன்மையுடன் ஹாங்காங்கில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது அதன் ஆக்கிரமிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதாக ஹாங்காங் மக்கள் கருதுகிறார்கள்.
Discussion about this post