மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விஸ்வரூபம் எடுத்துள்ள மீடு விவகாரம் பல பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழித்து வருகிறது. சமுதாயத்தில் மதிக்கப்படுகிற நிலையில்இருக்கிற பலர் இதில் சிக்கியுள்ளனர்.
ஒவ்வொருவரின் பாலியல் குற்றங்களும் வெளிப்படும் போதும் இவரா இப்படி என வாய்ப்பிளக்கச் செய்யும் அளவுக்கு அவர்களின் யோக்யதையை கிழித்து சமூக வலைதலங்களில் தொங்க விடுகிறார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள்.
அர்ஜுன், சுசி கணேஷன், தியாகராஜன், வைரமுத்து, ராதாரவி, உள்ளிட்ட பலர் இந்த புகார்களில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்கர் விருது பெற்றவர் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். மீ டூ விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சினிமா துறை பெண்களை மதிக்கும் துறையாக இருக்கவே விரும்புகிறேன்.
மீ டூ விவகாரம் தொடர்பாக வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களை கேட்கும் பொழுது அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க சமூக வலைதளங்கள் பெரும் சுதந்திரத்தைக் கொடுத்துள்ளன என பதிவிட்டுள்ளார்.
Discussion about this post