உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய முன்னணி வீரர் பஜ்ரங் பூனியா, ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவுடம் மோதினர்.
இதில் பஜ்ரங் புனியா சிறப்பாக விளையாடினாலும், ஜப்பான் வீரர் ஒடோகுரோ அவரை சமாளித்து விளையாடினார். இறுதிப் போட்டியில் 16-9 என்ற கணக்கில் ஒடோகுரோ பஜ்ரங் புனியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலக மல்யுத்தத்தில் 2வது முறையாக இந்திய வீரர் பஜ்ரங் புனியா பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கெனவே 2013ம ஆண்டு வெண்கலபப்தக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post