வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன், தற்போது, ஜீனியஸ், ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வரும் 26ஆம் தேதி ஜீனியஸ் வெளியாக உள்ளது. இதனைதொடர்ந்து, இயக்குனர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் நடிப்பில் கென்னடி கிளப் என்ற படத்தை சுசீந்திரன் இயக்க உள்ளார்.
பெண்கள் கபடி போட்டியை மையமாக வைத்து உருவாக்க உள்ள இப்படத்தில் பரோட்டா சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். குறிப்பாக, நிஜ கபடி விளையாடும் வீராங்கனைகள் நடிக்க உள்ளனர். மேலும், கென்னடி கிளப் படத்திற்கு பாலிவுட் வில்லனை இயக்குனர் சுசீந்திரன் தேடி வருகிறார். இப்படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் சரவணன் இயக்க உள்ளார். பழனியை கதைக்களமாக கொண்டு உருவாகும் இப்படத்தை அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post