இங்கிலாந்தில் ஒன்றரை வயது குழந்தை ஓட்டிச் சென்ற பொம்மைக் காருக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் அபராதம் விதித்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தின் டோர்சட் பகுதியில் உள்ள போஸ்கோம்பே என்ற இடத்தில் போக்குவரத்து காவலர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று தனது பொம்மைக் காரை ஓட்டியபடி வந்து கடை வீதியில் நிறுத்தியது.
இதையடுத்து காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்தாமல் கடை வீதியில் நிறுத்தியதாகக் கூறி அந்தக் குழந்தைக்கு காவல் அதிகாரி அபராதம் விதித்ததற்கான ரசீதை காரின் முகப்பில் ஒட்டினார். இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கேட்டபோது, குழந்தைக்கும் சட்டம் தெரியவேண்டும் என்பதற்காக தான் அப்படி செய்ததாகவும், அபராதம் செலுத்தவேண்டாம் என்றும் நகைக்சுவையாகக் கூறிச் சென்றார்.
Discussion about this post