அமைச்சர் ஜெயக்குமார் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் ஆப் ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ விகாரத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எப்படியாவது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவில் இந்த தவறான ஆடியோவை வெளியிட்டுள்ளதாகவும் இதை யார் செய்திருப்பார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும் எனவும் கூறியிருந்தார்.
கிரிமினல் ஒளிந்து கொண்டே கிரிமினல் வேலை செய்வதில் டிடிவி தினகரன் கில்லாடி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். இந்நிலையில் குற்றாலத்தில் குளு குளுவென ஆனந்த கூத்தாடி கொண்டிருக்கும் தங்கதமிழ்ச்செல்வன், 2 நாள் குற்றாலம் ரிசார்ட்டில் தங்கி விட்டு 3வது நாள் சென்னைக்கு சென்று விடுவோம் என்றார். மேலும், ஜெயக்குமார் ஆடியோவுக்கும், டி.டி.வி. தினகரனுக்கும் எந்த சம்பந்தமில்லை என்றும் அமைச்சர் குற்றமற்றவர் என்றால் உண்மையை கண்டுபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் உத்தரவிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post