தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கனடா நாட்டின் மாடல் அழகி நடிக்கிறார். ‘கூர்கா’ படம் மூலம் கதாநாயனாக அறிமுகமாகவுள்ளார். ‘டார்லிங்’, எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆன்டன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த மாடல் எலிசா முதன்மை வேடத்தில் நடிப்பதாக சாம் ஆன்டன் தெரிவித்திருக்கிறார். ‘இந்தக் கதாபாத்திரத்துக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது.
இவரது நடிப்புத் திறனைப் பார்த்து உடனடியாக இவரைத் தேர்ந்தெடுத்து விட்டோம். படத்தில் அமெரிக்க தூதராக நடிக்க இருக்கிறார். படத்தில் யோகி பாபுவுக்கும் எலிசாவுக்கும் இடையில் எந்தவித காதல் காட்சிகளும் இல்லை. ஆனால் படத்தில் இவர் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது’ என சாம் ஆன்டன் தெரிவித்திருக்கிறார்.
Discussion about this post