
சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என கடந்த மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது உச்நீதிமன்றம். இந்த உத்தரவுக்கு ஆர்.எஸ்.எஸ், பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்த்தன. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, கடந்த 17ஆம் தேதி திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி, சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு க்கு பாதுகாப்பு வழங்க மாநில அரசு முடிவு எடுத்தது. இதனைதொடர்ந்து, சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பிய, இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கடுப்பான தந்திரி, கோயிலை மூடுவோம் என எச்சரிக்கை விடுத்தார். பம்பை, சன்னிதானம் உள்ளிட்ட 4 இடங்களில் காவல்துறையினர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தனர். பதற்றம் நீடித்ததால் 22ஆம் தேதி வரை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைபடுத்தும் என முன்பே கேரள அரசு தெளிவுபடுத்தி உள்ளதாகவும் அதனால் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும், சபரிமலைக்கு வந்த பெண்களை காவல்துறையினர் தடுக்கவில்லை என்றும் ஆர்.எஸ்.எஸ் சபரிமலை கோயிலை ஒரு போர்க்களமாக உருவாக்க முயற்சித்தது எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
Discussion about this post