இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி அமைச்சர் ஜெயக்குமார் செக்ஸ் வைத்ததாக, தற்போது சமுக வலைதளங்களில் வாடஸ் ஆடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த ஆடியோ கடும் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில், திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ்பாபு என்பவர், அமைச்சர் ஜெயக்குமார் மீது மத்திய பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், உதவி கேட்டு வந்த பெண்ணை ஜெயக்குமார் கட்டாயப்படுத்தி செக்ஸ் வைத்துள்ளதாகவும் இதனால் அந்தப் பெண்ணின் வயிற்றில் கரு வளர, அதைக் கலைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அப்பெண் மறுக்க, அவரை மிரட்டியிருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தன் செல்வாக்கால் புகார் கொடுத்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம், நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதனிடயே, உதவி கேட்டு தனியாக வந்த இளம்பெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செக்ஸ் வைத்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த அப்பெண்ணும், அவரது தாயாரும், அமைச்சர் ஜெயக்குமாரிடம் கூறி கதறியுள்ளனர். அப்போது, அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் ஜெயக்குமார், இளம்பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளதாகவும் இதனைதொடர்ந்து, அந்த இளம்பெண்ணுடன் பல முறை செக்ஸ் வைத்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த இளம் பெண் வயிற்றில் கருத்தரித்ததாக தெரிகிறது.
ஆனால், அமைச்சர் ஜெயக்குமாரோ, இது திட்டமிட்ட சதி என்றும் தினகரனின் திட்டம் எனவும் கூறி வருகிறார். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இப்படி போலியான ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post