டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் மூலம் பரவக்கூடியது. இது கொசுவினால் பரவக்கூடியது. சில பேருக்கு இந்த காய்ச்சலின் அறிகுறிகள் தென்படாது. சில பேருக்கு தென்பட்டாலும் அவர்கள் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்று அதனை கண்டு கொள்வதும் இல்லை. இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் இது எலும்பை முறிக்கும் காய்ச்சல் எனவும் அழைக்கப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறையும்.எனவே பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சு வெல்லமும் பச்சையான சிறிய வெங்காயமும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சிறு சிறு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு சாப்பிட வேண்டும்.
இவ்வாறு செய்தால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உடனே உயர்வதுடன் டெங்குவை குணப்படுத்த தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கூடி விரைவில் டெங்குவை குணமாக்கும். இந்தஎளிய மருத்துவம் இது போன்ற காய்ச்சலுக்கு மிக சக்தி வாய்ந்த வீட்டு வைத்தியம் ஆகும்.
மேலும் டெங்கு கய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் நேரம் ஆரஞ்சு, பப்பாளி, கஞ்சி, மூலிகை டீ, இளநீர், காய்கறி, ஜூஸ், பழச்சாறு, புரோட்டின் உணவுகள், சூப்புகள், எலுமிச்சை சாறு, போன்ற உணவுகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். இந்த உணவுகள் எல்லாம் கட்டாயம் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
Discussion about this post