பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தையின் அறிவு கூர்மை இதனை பொருத்ததே. 6 மாதத்திற்கு பிறகு தாய்பாலுடன் சில உணவுகளை சேர்க்கலாம். அவித்து அரைத்த உணவுகள் கொடுக்கலாம்.
தக்காளி சூப், காய்கறி சூப் இரண்டு ஸ்பூன் கொடுக்கலாம். ஆரஞ்சு ஜூஸ், மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். மேலும் பருப்பு சாதம், இட்லி நன்கு மசித்து கொடுக்கலாம். முட்டையில் முதலில் வெள்ளைக்கருவை தவிர்த்து மஞ்சள் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். நேந்தரக்காயை காய வைத்து பொடித்து மாவாக செய்து கொடுத்தால் ஊட்டம் கிடைக்கும்.
1 வயதிற்கு மேல் அனைத்து உணவுகளை கொடுத்து வரவும். ஆனால் குழந்தைகளுக்கு புதிய உணவுகளை அறிமுகப்படுத்தும் போது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே அதனை நிறுத்தி கொஞ்ச நாட்கள் கழித்து கொடுத்து பார்க்கலாம். அப்படியும் வெறுப்பு காண்பித்தால் வேறு விதமாக செய்து பிடித்தவாறு கொடுக்கலாம்.
அதேப்போல் குழந்தைக்கு சில உணவுகள் சிறிது அலர்ஜி ஏற்ப்படுத்தினால் சிறிது காலம் கழிந்து திரும்பியும் கொடுத்து பார்க்க வேண்டும். அப்பொழுது தான் அலர்ஜி என்பது போகும். அதுவே மிகப்பெரிய அலர்ஜி ஏற்ப்படுத்தினால் டாக்க்டரின் அறிவுரைப்படி கேட்கலாம்.
குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் சொல்லும் உணவை பெரிதாக சொல்லி கொடுங்கள். அவர்களை அவர்களாக சாப்பிட விடுங்கள். உணவினை வேண்டாம் என்று சொல்லும் போது திணிக்காதீர்கள். முடிந்தவரை உனவினை கலர்புல்லாக கொடுங்கள்.
Discussion about this post