இளநீர் என்ற வார்த்தை யாருக்குதான் பிடிக்காது? என்னவொரு குளுமை! ஆனால் இளநீர் உடலுக்கு குளுமை தருவதையும் தாண்டி இன்னும் எண்ணற்ற பலன்களை வழங்க கூடியது. வெயிலில் ஏற்படும் தாகத்தைத் தணிக்க இளநீருக்கு மிஞ்சியது எதுவுமில்லை. பழரசங்கள் தொண்டைக்கு இதமாக இருந்தாலும் சிரமமின்றி, செலவின்றி மிகவும் தூய்மையாக கிடைக்க கூடிய ஒன்று இளநீர்.
இப்படிப்பட்ட இளநீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும் இதை வெறும் வயிற்றில் குடிக்க கூடாது. தூங்கி எழுந்தவுடன் நம் வயிறு சற்று சூடாக இருக்கும். அந்த சமயத்தில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சித்தன்மையால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இரத்ததில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இளநீரை உணவு இடைவேளையில் அருந்துதல் நல்லது.
மேலும் இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் நிறைய உள்ளது. இதை தவிர வைட்டமின்களும், அமிலோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருக கூடாது. அதேப் போல் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின் தேங்காயில் உள்ள இளநீரே இவர்களுக்கு பருக உகந்தது.
Discussion about this post