ஒரு கேரட்டினை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் புதினாவையும் சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். அடுத்ததாக பீட்ரூட்டையும் தோல் சீவி கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இவை மூன்றையும் அரைத்து சிறிது நீர் சேர்த்து மற்றும் எலுமிச்சை சாறும் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பும் சேர்க்க வேண்டும். பின்னர் இதனை குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் கொழுப்புகள் விரைவாக கரைந்து விடும். மேலும் கொழுப்புகள் கரைய தொடங்கி உடல் எடை ஒரே வாரத்தில் குறைய தொடங்கும்.
இதே போல் தக்காளியை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக புதினாவையும் சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். அடுத்ததாக பீட்ரூட்டையும் தோல் சீவி கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் இவை மூன்றையும் மேலே கூறியது போல அரைத்து சிறிது நீர் சேர்த்து மற்றும் எலுமிச்சை சாறும் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து இதனை குடிக்க வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
இவ்வாறு இரண்டு விதமாக பீட்ரூட் மற்றும் புதினா, எலுமிச்சை, உப்புடன், கேரட் அல்லது தக்காளியை சேர்த்துக் தவறாமல் உட்கொள்ளுங்கள். மேலும் இது இயற்க்கையானது. எந்த வித பாதிப்பும் ஏற்படாத ஒரு அருமையான அருமருந்து. மேலும் அது ஸ்கின்க்கும் மிக நல்லது.
Discussion about this post