ரஜினிகாந்த் தனது பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் தேதி வருவதையொட்டி கட்சி தொடங்குவார் என்று அரசியல் வட்டாரத்திலும், ரசிகர்கள் வட்டாரத்திலும் மிகுந்த எதிர்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கட்சி தொடங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டதாகவும், கட்சி தொடங்குவதற்கு நேரம், காவல் பார்த்து அறிவிப்பேன் எனவும் கூறினார். மேலும், மக்களவை தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை, தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். இதனால், அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்த நேரத்தில், ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணனோ, டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த கட்சி தொடங்குவார் என அறிவித்தார். இதனால், ரசிகர்கள் ஓரளவு நிம்மதியடைந்தனர்.
இதனிடையே, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த 2.0 படம், நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனைதொடர்ந்து, பேட்டா படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அந்த படம் அரசியல் படமாக இருக்க வேண்டும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸிடம் ரஜினிகாந்த கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது, எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பதே ரஜினிகாந்தின் லட்சியமம். எனவே, விரைவில் ரஜினிகாந்த்- ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post