ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்தப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், அரசியல்வாதியான பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது டீசர் வெளியாகி படத்தின் மீதான பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளந்து.
சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, தீபாவளிக்கு முன்னதாக வரும் 2ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, படக்குழுவினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை என்பதாலும் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதாலும் முன்னதாக படத்தை வெளியிட திட்டமிடுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த வாரத்திலேயே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post