கடந்த 14 ஆண்ட்டுகளுக்கு முன் நான் தனியாக இருந்த போது, கவிஞர் வைரமுத்து என்னை கட்டிப்பிடித்தார் என புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இது தொடர்பாக சின்மயி மீடூ இயக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக, சின்மயிக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது. மேலும், சின்மயிக்கு பல்வேறு பெண்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து வீடியோ ஒன்றை வைரமுத்து வெளியிட்டிருந்தார். அதில், என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் அவை அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை எனவும் தெரிவித்திருந்தார். மேலும், புகார் தெரிவித்தவர்கள் வழக்கு தொடுத்தால் சந்திக்கிறேன் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
சின்மயிக்கு ஆதரவாக பாஜகவை சேர்ந்த தமிழிசை, ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆதரவாக பேசி வருகின்றனர். கவிஞர் வைரமுத்து தான் பெற்ற விருதுகளை திருப்பிக்கொடுத்து விட்டு வழக்கை சந்திக்க தயாரா என ஹெச்.ராஜா சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், வைரமுத்து மீதான பாலியல் புகார் விவகாரத்தில் சின்மயிக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் பாஜக தான் சின்மயிக்கு ஸ்கெச் போட்டு கொடுப்பாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post