ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து சச்சின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்தார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய தவான் (29), ரோகித் சர்மா (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் விராட் கோஹ்லியுடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். விராட் கோஹ்லி அரைசதம் அடித்தபின், அம்பதி ராயுடு அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்தியாவின் ஸ்கோர் 32.2 ஓவரில் 179 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. அம்பதி ராயுடு 80 பந்தில் 8 பவுண்டரியுடன் 73 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் டோனி ஜோடி சேர்ந்தார். விராட் கோஹ்லி 81 ரன்னைத் தொட்டபோது 205 இன்னிங்சில் 10 ஆயிரம் ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டினார். இதற்கு முன் சச்சின் 259 இன்னிங்சில் இந்த சாதனையைப் படைத்திருந்தார். தற்போது விராட் கோஹ்லி 205 இன்னிங்சில் அடித்ததன் மூலம் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Discussion about this post