நடிகர் ஜெய் நடித்த வாமனன் படத்தில் அறிமுகமான பிரியா ஆனந்த், தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் நடித்தார். இதனையடுத்து, அதர்வா, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் என இளம் நாயகர்களுடன் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த், பிரித்விராஜுக்கு ஜோடியாக மலையாளத்தில் வெளியான எஸ்றா படத்தில் நடித்தார். இந்தப்படம் பிரியா ஆனந்துக்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. இதனால், மலையாளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வருவதை அடுத்து, திலீப்புக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். முன்னதாக, எஸ்றா படத்தில் பிரியா ஆனந்த் ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post