பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர், கயல் ஆனந்தி, கராத்தே வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திரைத்துறை சார்ந்தவர்கள், அரசியல்வாதிகள், விமர்சகர்கள், ஊடகங்கள் ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரின் பாராட்டுக்களையும் இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த ரஜினிகாந்த், இரஞ்சித்திடமும், இயக்குனர் மாரிசெல்வராஜிடமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ஒரு நாவலைப்போல பரியேறும் பெருமாள் திரைப்படத்தை உருவாக்கியிருப்பதாகவும் ஒரு அதிர்வை ஏற்படுத்திவிட்டதாகவும் என கூறிய ரஜினிகாந்த், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Discussion about this post