டிக் டிக் டிக் படத்தை அடுத்து ஜெயம் ரவி அடங்க மறு என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை கார்த்திக் தங்கவேல் இயக்க, ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். மேலும், சம்பத்ராஜ்,முனீஸ்காந்த்,பொன்வண்ணன், சுப்பு பஞ்சு,பாபு ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், படத்தை நவம்பர் மாதம் வெளியிட் திட்டமிட்ட தயாரிப்பாளர், தமிழகத்தில் தியேட்டர் உரிமையை 15 கோடிக்கு வியாபரம் செய்ய இருந்தார். ஆனால், அந்த விலைக்கு வாங்க யாரும் முன்வராத நிலையில், அடங்க மறு படத்தை டிஸ்ட்ரிபியூஷன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.
Discussion about this post