வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை. சமீபத்தில் வெளியாக ஓடிக்கொண்டிருகிறது. இந்தப்படத்தில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான வடசென்னை, இரண்டு விதமான விமர்சனங்களை எதிர்க்கொண்டன.
மேலும், இப்படத்தில் உள்ள சில காட்சிகளை நீக்க கோரி மீனவர்கள் சங்கம் போர்க்கொடி தூக்க, மறுபுறம் எதிர்பார்த்தப்படி வசூலாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அடுத்த பாக முயற்சியை கைவிடலாமா என தனுஷ் யோசிப்பதாக தெரிகிறது. ஆனால், இயக்குனர் வெற்றி மாறனோ, அடுத்த பாகத்தின் பாதி பணிகள் முடிந்த நிலையில், மீதியை முடித்து விடுவோம் என்றும் முதல் பாகத்தில் இழந்ததை அதில் மீட்கலாம் என்கிறாராம்.
Discussion about this post