பாணா காத்தாடி படத்தின் மூலமாக அறிமுகமானவர் அதர்வா. இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருந்தார். சில ஆண்டுகளுக்கு பின்னர், பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் செம போத ஆகாத படத்தில் அதர்வா நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான இந்தப்படத்தை அதர்வாவே தயாரித்திருந்தார்.
செம் போத ஆகாத படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்ட போது, எட்செட்ரா என்டர்டெய்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் மதியழகன் என்பவர் படத்தை வாங்கி வெளியிட்டிருந்தார். இதில், மதியழகனுக்கு 5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்ற அதர்வா, மதியழகனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்டும் வகையில், மின்னல் வீரன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அதர்வா சம்பளம் வாங்காமல் நடித்து கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post