உணவு முறையினை சரி செய்வதினால் உடல் எடையை குறைக்கலாம். அதிக கொழுப்பு நிறைந்த உணவினை குறைத்து காய்கறி, பழங்கள், அதிகம் உண்ணலாம். தினமும் ஒரு கீரை வகை கட்டாயம் சேர்க்கனும். மீன் மட்டும் எடுக்கலாம். மிகவும் அதிக உடல் எடை உள்ளவர்கள் ப்ரை பண்ணாமல் குழம்பில் இட்டு உண்ணலாம்.
பிராய்லர் சிக்கன், முட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பால் உபயோகிக்கலாம். பால் வேண்டாம் என்றால் பாதாம், வால்நட் சேர்க்கலாம். இரவு உணவும் மாலை 6 மணிக்கு முன்பாக சாப்பிட்டு இரவு பசித்தால் பழங்கள், சூப் மட்டும் எடுக்கலாம்.
இது மட்டுமில்லாமல் ஹார்மோன் மூலம் உடல் எடை வருவதையும் தவிர்க்க வேண்டும். நாம் இரவில் வெளிச்சம் இல்லாத போது மெலட்டெயின் என்னும் ஹார்மோன் உருவாகும். அதுவே அனைத்து நோய்களுக்கும் தீர்வாகும். நாம் இரவில் 10 மனிக்கு மேல் லேட்டாக தூங்கும் போது அவை சுரக்காது எனவே அதுவே அனைத்து ஹார்மோன் பிரச்சனையை உருவாக்கி உடல் எடை அதிகரிக்கிறது.
எனவே சரியான உறக்கம் தேவை. பின் நல்ல சந்தோசமாக இருக்க வேண்டும். சந்தோசமற்று இருப்பதினால் உடல் எடை அதிகரிக்கும். உடல் எடை அதிகரிக்கிறதே என்ற கவலையே உடல் எடையை இன்னும் அதிகரிக்கும். இதை சரி செய்தாலும் மிக முக்கியமான ஒரு வழி உடற்பயிற்சி மற்றும் உடல் அசைவு. நமது உடல் அசைவை மட்டும் சரிசெய்தால் உடல் எடை குறைப்பது கடினம் அல்லது கட்டாயமான குறைந்த உணவு பழக்கம் வேறு பாதிப்பை உருவாக்கும். எனவே உணவு முறையில் சரியான கட்டுபாட்டுடனும், உடற்பயிற்சியும் உடல் எடை குறைக்க உதவும். யோகா செய்வதும் நன்மை அளிக்கும்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் 2 விதமாக பார்ப்பார்கள். ஒன்று ஆப்பிள் சேப் மற்றொன்று பேரிக்காய் சேப். ஆப்பிள் சேப் உள்ளவர்கள் மேல் பக்கம் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். எனவே அதற்கு தகுந்தவாறு பயிற்ச்சியினை செய்யலாம். பேரிக்காய் சேப் உள்ளவர்கள் இடுப்பு, கால் பகுதிக்கான பயிற்ச்சியினை அதிகமாக செய்யலாம்.
Discussion about this post