அறிவியல் படி கபம், பித்தம், வாயு மூன்றையும் சம நிலையில் வைப்பதற்கு உதவுகிறது. இவை பாக்டீரியாக்களை கொல்லும். எனவே நமது தண்ணீரை சுத்தப்படுத்தி தருகிறது. தைராய்டு பிரச்சனைக்கு தீர்வாகிறது. தைராய்டு சுரப்பி நன்றாக இருக்க தாமிரம் முக்கியமாக கருதப்படுகிறது.
மூட்டுகளில் ஏற்படும் வலியை போக்கும் எலும்புகளுக்கு பலம் கொடுக்கும். புண்களை சீக்கிரம் குணப்படுத்தும். மூளையில் உள்ள நரம்பணுக்களுக்கு நடுவில் உள்ள இடைவெளியை பாதுகாக்க உள்ள உறைகளை உருவாக்க கொழுப்பு வகை பொருட்களை தொடுக்க தாமிரம் உதவிகிறது. வலிப்பு வரமலும் அது தடுக்கும்.
தாமிரம் வயிற்றை மெதுவாக சுருக்கி விரிவடைய செய்கிறது. அதனால் நல்ல செரிமானம் நடக்கும். உடலில் சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. அதனால் இரத்த சோகையை குணப்படுத்தும். தாமிரத்தில் நிறைய ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளதால் புற்று நோய் வராமல் தடுக்கும். வயதாவதை தடுக்கிறது. சருமம் முடிக்கு நல்ல இரத்த ஓட்டம் கொடுக்கிறது. கர்ப்பினி பெண்களுக்கு மிகவும் நல்லது.
குடல் புண்களை குணமாக்க வல்லது. இத்தனை நன்மை தரும் காப்பர் பாத்திரத்தை தினமும் புளி போட்டு துவக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியம். தினமும் நன்கு துவக்கிய பின்னர் தண்ணீர் வைத்து குடிக்க வேண்டும். இல்லையேல் தாமிரம் காற்றுடன் கலந்து வேதிவினை புரியும் போது பச்சை நிறம் ஆகும். குப்ரிக் ஆக்சைடு என்ற வேதிப்பொருள் உடலுக்கு கெடுதல். குறிப்பாக செம்பு பாத்திரம் உள்ளாயும் செம்பால் ஆனதாக இருக்க வேண்டும்.
Discussion about this post