இவை மலைப்பகுதியாக உள்ளது. இந்த தீவு ரெட் ஒயின் தயாரிப்பதில் பிரபலமாக உள்ளது. தீவு பச்சை செடிகளால் சூழப்பட்டுள்ளது. அகு உள்ள மக்களுக்கு எந்த விதமான உடல் உபாதைகளும் இல்லாமல் இருக்கிறார்கள். அதற்கான இரகசியம் அவர்களின் இயற்க்கையான வாழ்க்கை முறையே. அவர்களின் இடத்திற்கு தகுந்தவாறு உள்ள உணவு முறைகள்.
அங்கே அனைவரின் வீட்டிலும் ஆடுகளும் வளர்க்கப்படுகின்றன. அதன் பாலை கொண்டு சீஸ் தயாரிக்கின்றனர். டீ போடுவதற்கு அங்கு நிறைந்துள்ள அனைத்து மருத்துவ குணம் நிறைந்துள்ள பூக்கள் மற்றும் செடிகளை உபயோகிக்கிறார்கள்.
அது மட்டுமின்றி அவர்கள் இயற்க்கை முறையிலான தேனை தயாரிக்கின்றனர். அந்த தேனை ½ டீ ஸ்பூன் தினமும் உண்டு வந்தால் எந்தவித நோயும் இன்றி ஆயுள் கூடும் என்கிறார்கள். அந்த தேனிக்கள் கொட்டினால் கூட நல்லது. மருத்துவகுணம் உடையது என்கிறார்கள். மேலும் அவர்கள் தினமும் 2 ஸ்பூன் ரெட் ஒயின் குடிக்கிறார்கள்.
அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்கிறார்கள். விவசாயம் முதல் வீட்டை சுற்றியுள்ள செடிகள் வரை அவர்கள் பராமரிக்கிறார்கள். 102 வயது பாட்டிக்கூட அவர்களேதான் தோட்ட வேலை செய்கிறார்கள். அவர்களின் கடல் நீர் கூட மருத்துவ குணமுடையதாக உள்ளது.
அவர்கள் அனைவரும் மலைச்சரிவுகளில் நடக்கின்றனர். அவர்களின் வீடுகள் கூட மரத்திலும், சுற்றிலும் மருத்துவ குணம் நிறைந்த செடிகளின் காற்றும் உள்ளது. இதுதான் இக்காரியாவின் நீண்ட நாள் வாழ்க்கையின் இரகசியம்.
Discussion about this post