வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து கடந்தாண்டு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இருவேறு தீர்ப்புகளை வழங்கியிருந்தது. அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் உத்தரவை உறுதி செய்தும், நீதிபதி சுந்தர், சபாநாயகர் உத்தரவை ரத்து செய்தும் தீர்ப்பளித்திருந்தனர்.
இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சத்தியநாராயணனை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில், கடந்த ஜூலை மாதம் துவங்கி, 12 நாட்கள் வழக்கறிஞர்கள் வாதம் நடைபெற்ற நிலையில், வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Discussion about this post