குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். மேலும், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய சிற்பி என்றும், இரும்பு மனிதர் என்றும் அழைக்கப்படுகிறார். இவரை பெருமைப்படுத்தும் வகையில், நர்மதை ஆற்றின் நடுவில், 597 அடி உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
படேலின் பிறந்த நாளான வரும் 31 ஆம் தேதி, சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இந்நிலையில், சிலை அமைப்பதற்கு 3 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகளுக்கு சிலை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, குஜராத் நிறுவனத்துக்கு, 600 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக, சீனாவில் உள்ள, 502 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
Discussion about this post