ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘சர்கார்’ படம் தீபாவளி பண்டிகையான வருகிற நவம்பர் 6-ந் தேதி தான் திரைக்கு வரும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களை ‘சர்கார்’ படத்துக்கு ஒதுக்கி உள்ளனர். இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாக வருகிற 2-ந் தேதி ‘சர்கார்’ படம் ரிலீஸ் செய்யப்படும் என வதந்திகள் பரவின.
இந்த தகவல் வதந்தி என்றும் சர்கார் படம் தீபாவளி தினத்தன்று தான் வெளியாகும் என தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post