நடிகர்அர்ஜுன் நிபுணன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, தன்னிடம் அனுமதிபெறாமல் கட்டிப்பிடித்து மோசமாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் அர்ஜுனும் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஸ்ருதியின் பின்னணியில் வேறு யாரோ இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது : ”அர்ஜுன் மூத்த நடிகர் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஆனால்பாலியல் புகார் கூறியுள்ள அந்தபெண், இவ்வளவு நாட்கள் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தை தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியை நாம் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது. தன் மீதான பாலியல் பாலியல் புகாரை அர்ஜுன் புறம்தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது பெருந்தன்மையை காட்டும். பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ‘மீ டு’ இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும்காலத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்.” இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
Discussion about this post