பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சமீப நாட்களாக, ‘மீடூ ‘ ஹேஷ்டாக்கில் பல பெண்கள், தாங்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்து புகார்கூறி வருகின்றனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோரது பெயர்கள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும் என மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த குழுவில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி, மேனகா காந்தி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சட்ட ரீதியான வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்கு இக்குழு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post