சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் டுவேன் பிராவோ அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் சிறந்த ஆல்ரவுடராக திகழ்ந்து வந்த பிராவோ. 35 வயதாகும் பிராவோ இதுவரை 164 ஒருநாள் போட்டி, 40 டெஸ்ட், 66 டி20 போட்டி என மொத்தம் 270 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேற்கிந்திய தீவின் கிரிக்கெட் போர்டு உடனான பிரச்சனையை காரணமாக கடந்த 2016-ம் ஆண்டுக்கு பின்னர் அவர் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்தார். உள்ளூர் டி20 போட்டிகளில் பங்கேற்றுவந்த பிராவோ இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். அவரின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post