இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ‘டை’யில் முடிந்தது. இந்தப் போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறியதாவது: இந்த போட்டி மிகவும் பிரமாதமாக இருந்தது. வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் போராட்டம் என்னை வியக்க வைத்தது. அவர்களது போராட்ட குணம் என்னை மிகவும் கவர்ந்தது. இதே போல அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். வெஸ்ட்இண்டீஸ் முதல் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் ஹோப், ஹெட்மயர் ஆட்டம் பிரமிக்க வைத்தது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடக்கத்தில் ரன்கள் விட்டு கொடுத்தாலும் இறுதியில் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அம்பதிராயுடு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். 4-வது வீரராக அவர் தொடர்ந்து களம் இறக்கப்படுவார். தனிப்பட்ட முறையில் எனது ஆட்டமும், சாதனையும் பெருமை அளிக்கிறது. இவ்வாறு கோலி கூறியுள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3-வது ஒருநாள் போட்டி வருகிற 27-ந்தேதி புனேவில் நடக்கிறது.
Discussion about this post