ஜெயலலிதாவின் ஆசியோடு அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியாக, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மூவரில் ஒருவர் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு. இவரது நாக்கு மாற்றி மாற்றி நாடகமாடுவதாக கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின் அ.தி.மு.க. பிளவுற்ற போது சசிகலா சைடு வண்டியை ஓட்டினார் தனியரசு, தினகரனை ஆஹோ! ஓஹோ! வென புகழ்ந்தார். இந்நிலையில் இப்போது எடப்பாடியாருக்கு ஆதரவாக நாயணம் வாசிக்க துவங்கியுள்ளார் இப்படி…
“தி.மு.க. தொடுத்துள்ள வழக்கை சந்திக்க முதல்வர் தயாராக உள்ளார். வழக்கில்லாத அரசியல்வாதி இந்தியாவுல யாரு? இதை எளிதாக சந்தித்து ‘நிரபராதி’ என நிரூபிப்பார்.”
தனியரசு அடிக்கடி இப்படி அணி மாறி பேசுவதால் அவரது நாக்கு நாடகம் போடுவதாக விமர்சகர்கள் போட்டுப் பொளக்கின்றனர்.
Discussion about this post