பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு இதோ வரப்போகிறது! எனும் பரபரப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் விவகாரம் அ.தி.மு.க.வை படுத்தி எடுக்கிறது. இந்த நிலையில் தினகரனின் தளபதியான வெற்றிவேல் எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு செமத்தியாக அரசியல் ராட்டினம் சுற்றி வருகிறார்.
’ஜெயக்குமாரின் ஆடியோவை வெளியிட்டது மாபியா கும்பல் இல்லை, அவரது மாமியார் கும்பல். ஜெயக்குமார் உடனடியாக தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரால் அந்தப் பெண்ணுக்கோ, குழந்தைக்கோ அச்சுறுத்தல் வந்தால் நானே களமிறங்கி போராடுவேன்.’ என்று கத்தி தீட்டியிருப்பவர்,
‘இவரைப்போல் இன்னும் பல அமைச்சர்கள் இந்த மாதிரியான விவகாரத்தில் சிக்கி உள்ளனர். என்னிடம் ஆதாரம் உள்ளது. கவர்னர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்.’ என்று அ.தி.மு.க.வுக்கு எதிராக தவுசண்ட் வாலா கொளுத்தியுள்ளார்.
இது எங்கு போய் நிக்குமோ!
Discussion about this post