ரஜினி பிரதான ரோலில் நடிக்கும் மல்டி ஸ்டார்ஸ் மூவியான ‘பேட்ட’ படத்தில் ஆச்சரியமாக சிம்ரன் கமிட் ஆனார். ரஜினியுடன் அவரது முதல் படம் இது. சில வருடங்களுக்கு முன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரவுண்ட் வந்த சிம்ரன் ஜோடி சேராதது ரஜினியுடன் மட்டும் தான். இந்நிலையில் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது அவருக்கு.
பேட்ட-யில் சிம்ரன் கமிட் ஆனதே ஆச்சரியம் தந்த நிலையில், அடுத்த சர்ப்பரைஸிங்காக த்ரிஷாவும் வந்தார். பிளாஸ்பேக் ரஜினிக்கு அவர்தான் ஜோடி என்கிறார்கள். இந்தப்படத்தின் ஷூட் முழுவதுமாக முடிந்துவிட்டது என்று பேசப்படுகிறது.
இந்த சூழலில் செட்டில் த்ரிஷாவை சிம்ரன் அநியாயத்துக்கு புகழ்ந்திருக்கும் விஷயம் வைரலாகி இருக்கிறது. ”நான் ஜோடி படத்துல ஹீரோயினா பண்ணுனப்ப த்ரிஷா சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட். ஆனா அதுக்குப் பிறகு இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டிருக்காங்க. முழுக்க முழுக்க அவங்களோட ஆஸம் திறமைதான் இதுக்கு காரணம். த்ரிஷாவோட டான்ஸ் மூவ்மெண்ட்ஸுக்கு நான் ஃபேன்! அவங்களோட வாய்ப்பு த்ரில்லிங்கா இருக்குது.” என்றிருக்கிறார்.
குயின் ஆஃப் டான்ஸே சிலிர்த்து சிலாகித்த பின் வேறென்ன விருது வேண்டும் த்ரிஷுக்கு?!
Discussion about this post