தொடர்ந்து தோல்வி பரிசையே வாங்கிக் கொண்டிருந்த விஷாலை ‘இரும்புத் திரை’ வெற்றி சற்றே நிமிர்ந்து உட்கார வைத்தது. இந்நிலையில், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் தனது பழையை மெகா ஹிட் மூவியான ‘சண்டக்கோழி’யின் சீக்வெலை கொண்டு வந்தார்.
சமீபத்தில் வெளியான இந்த படத்துக்கு மிக்ஸ்டு ரிவியூ கிடைத்திருக்கிறது. பண்டிகை காலமான இப்போது கடந்த வாரம் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறைகள் வந்த வகையில் ஓரளவு காசு கலெக்ஷன் பார்த்துவிட்டனர். ஆனால் தீபாவளி வரை ஓடினால்தான் கல்லா களைகட்டும் எனும் நிலை.
விஷால் டீம் மாய்ந்து மாய்ந்து படத்தை ப்ரமோட் செய்து கொண்டிருக்கிறது. ஆனால் வேண்டுமென்றே சிலர் இணையதளம் வாயிலாக இந்தப்படம் மொக்கை, தேறாது, பைசா நஷ்டம், அரத பழைய கதை, உப்பு சப்பில்லாத காட்சிகள்! என்று பலவந்தமாக படத்தை பலவீனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ரீல் சண்டக்கோழியை விட இந்த விஷயத்துக்காகத்தான் ரியல் சண்டக்கோழியாக மாறி நிற்கிறார் விஷால். இந்த குழிபறிப்பு வேலையை செய்வது யார்? என கண்டுபிடிக்க துடியாய் துடிக்கிறாராம்.
Discussion about this post