’பாஸு நாங்கல்லாம் யாரு தெரியும்ல!’ என்று ஆல் தி டைம் எடக்கு மடக்காக மதுரைக்காரய்ங்க பேசிக் கொண்டு திரிவது வாடிக்கை. ஆனால் அந்த ஊரைச் சேர்ந்த அமைச்சர்களுமா இப்படி இருக்கோணும்? அட இதை நாம கேட்கலை பாஸ், தமிழக முதல்வர் எடப்பாடியார்தான் கேக்குறாப்ல.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்லூர் ராஜூவும், ஆர்.பி.உதயகுமாரும் தமிழக அமைச்சரவையில் இருக்கிறார்கள். பொழுது போய் பொழுது விடிந்தால் ரெண்டு பேரும் வாயை வெச்சுட்டு கம்முன்னே இருக்கிறதில்லை. ஏதாச்சும் கோக்குமாக்குத் தனமா பேசி ஏழரையை கூட்டி விடுகிறார்கள்.
’இந்த கழகத்தை பெண் ஆளவேண்டிய காலம் வரலாம்’ என்று சமீபத்தில்தான் செல்லூரார் ஒரு பக்கெட் பஞ்சாயத்தை இழுத்து வைத்தார். அவர் ரெஸ்ட் எடுக்க போன நிலையில் உதயகுமாரோ “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் படி நானும், அமைச்சர் கடம்பூர் ராஜூவும்தான் கோப்பில் கையெழுத்து போட்டிருக்கிறோம்.
முதல்வர் இன்னும் கையெழுத்திடவில்லை.” என்று சொல்லியிருக்கிறார்.
எடப்பாடியின் காதில் இந்த தகவல் போய் சேர, தலைவர் செம்ம காண்டு மோடுக்கு போய்விட்டார்.
யப்பே! கொஞ்சம் பேயாம இருங்கப்பே!
Discussion about this post