அஜித்துக்கு மரண மாஸ் டர்னிங் பாயிண்டாக அமைந்த படங்களில் மிக முக்கியமானது வாலி! இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் மிகப்பெரிய விசிட்டிங் கார்டு அந்தப்படம். ’டபுள் அஜித் – சிம்ரன் – தேவா’ என செம்ம காம்போ அமைந்த அந்தப் படம் தமிழ் சினிமாவில் ரெக்கார்டு பண்ணியது.
இந்நிலையில், சமீப காலமாக அஜித் பெரும்பாலும் ஓவர் மெச்சூர்டு கதாபாத்திரங்களையே செய்து கொண்டிருக்கிறார். ஜாலி கேலியாக அதே நேரத்தில் நடிக்க ஸ்கோப் இருக்கும் படமொன்றை அவர் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில்தான் எஸ்.ஜே.சூர்யா அஜித்துக்கு ‘வாலி – 2’ பற்றி சின்னதாக ஒரு ஹிண்ட் கொடுத்தாராம். இது சக்சஸ் படங்களின் சீக்வெல் வரும் காலமென்பதால் அஜித்தும் ‘பார்க்கலாம் பாஸ்’ என்றிருக்கிறார்.
ஆனால் இதில் ஒரு அழகிய சிக்கல் என்னவென்றால், இந்தப் படத்துக்காக அஜித் உடம்பை குறைத்து, டை செய்து, ஹேர் ஸ்டைலை மாற்றி மீண்டும் பழைய யங் அஜித்தாக மாற வேண்டும், அதுவும் வாலி படத்தின் தோற்றத்தை சற்றே தொட்ட மாதிரி இருக்க வேண்டும்! என்பதுதான். அட்லீஸ் ‘பூவெல்லாம் உன்வாசம்’ லுக்கையாவது திருப்பிக் கொண்டு வந்தால்தான் ஆச்சு! என்றிருக்கிறாரம் எஸ்.ஜே.எஸ்.
இது ரிஸ்க் ஆச்சே! என்று யோசிக்கிறார் அஜித். அனால் தல-யின் குடும்பமோ, விஸ்வாசம் படத்துக்காக உடம்பை இரும்பாக மாற்றிக் காட்டி தென்னிந்திய சினிமாவையே தெறிக்க விட்டவர் அஜித், அவரால் இந்த விஷயத்தை செய்ய முடியாதா? என்று நினைக்கிறார்கள். அதுவும், அஜித் உடம்பை குறைத்து தன் தோற்றத்தை பொலிவு செய்து கொள்ள இந்த ப்ராஜெக்ட் உதவுமென்பதால் ‘வாலி – 2’வுக்கு ஓ.கே. செய்ய சொல்லி நச்சரிக்கிறாராம் ஷாலினி.
தல வீ ஆர் வெயிட்டிங்!
Discussion about this post