ஆனாலும் ஸ்டாலினுக்கு இது மிக முக்கியமான அரசியல் காலம். கருணாநிதி இறப்பின் பின் தலைவராகி இருக்கும் அவர் எதிர்வரும் தேர்தல்களில் தன் கட்சியை ஜெயிக்க வைக்க வேண்டிய வாழ்வா! வீழ்வா! கட்டாயத்தில் இருக்கிறார்.
ஆனால் இந்த சூழல் பார்த்து ‘நான் முதல்வரானால்’ என்று விஜய் ‘சர்கார்’ பட மேடையில் அரசியல் பேசியிருக்கும் விவகாரமும், அந்தப் படத்தில் தி.மு.க.வின் முக்கிய பேச்சாளர்களான ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோர் பயன்படுத்தப் பட்டிருக்கும் விஷயமும் ஸ்டாலினை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த சூழலில், சர்கார் படம் வெளியானதும், அதை பார்த்துவிட்டு, அதில் ஸ்டாலினுக்கு எதிராகவோ அல்லது தி.மு.க.வை சீண்டும் தொனியிலோ வசனங்களோ அல்லது காட்சி அமைப்புகளோ இருந்தால் அதன் பின் மிக கடுமையாக விஜய்க்கு எதிராக ரியாக்ட் செய்யும் முடிவில் இருக்கிறது தி.மு.க.
Discussion about this post