கோயமுத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் தேசிய அளவில் மிக முக்கியமான ஒரு கல்வி நிறுவனம். இந்த பல்கலையின் துணைவேந்தராக இருக்கும் ராமசாமி அடுத்த மாதம் 17-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான சம்பிரதாய பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ராமசாமியே நீதிமன்றத்தின் உத்தரவுக்கு புறம்பாக அந்த பதவியில் இருக்கிறார் என்று ஒரு பஞ்சாயத்து இருக்கிறது. இந்நிலையில், காலியாகும் அவரது பதவிக்காக விண்ணப்பித்துள்ள நபர்களின் பட்டியலை பார்த்தபோது விக்கித்து நின்று விட்டனராம் உயர்கல்வி துறையின் நேர்மையான ஸ்காலர்கள் சிலர்.
காரணம்? விண்ணப்பித்திருக்கும் 55 பேரில் ஜேம்ஸ் பிச்சை என்பவரும் ஒருவர். இவர் அதே கோயமுத்தூரின் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சில வருடங்களுக்கு முன் இருந்தவர். இவர் மீது ஊழல் புகார்கள் உண்டு. ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் தற்போதும் அந்த புகார்கள் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில் ஜேம்ஸ் பிச்சை, தனக்கிருக்கும் அதிகார செல்வாக்கை பயன்படுத்தி வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தராக வந்து அமர்ந்துவிடுவாரோ? என்று அரண்டு கிடக்கிறார்கள் ஸ்காலர்கள். ஜேம்ஸ் மீதான விசாரணையின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தால் கூட அவர் இங்கே போட்டியிடலாம், தப்பில்லை! என்கிறார்கள்.
Discussion about this post