திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 20 தொகுதிகளுக்கும் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல்நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார்.‘
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்றும் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என்றும் 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தால் ஏற்படும் காலியிடங்களுக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.
எனவே அந்த அடிப்படையில் இந்த தொகுதிகளிலும் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். 18 பேரும் உச்சநீதிமன்றத்தில் முறையிடும் பட்சத்தில் நீதித்துறையின் வழிகாட்டுதல் படி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
Discussion about this post