சிபிஐ இயக்குநரை நியமிக்கவோ, பதவி விலக்கவோ பிரதமருக்கு தனி அதிகாரமில்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி சிபிஐ இயக்குநரை பதவியிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், 3 பேர் கொண்ட குழுவால் மட்டுமே அதை செய்ய முடியும். அதன்படி பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய 3 பேரும் இணைந்து உத்தரவிட்டால் மட்டுமே சிபிஐ இயக்குநரை பதவியிலிருந்து விடுவிக்க முடியும் எனத் தெரிவித்தார்.
சட்டம் அவ்வாறு இருக்க மத்திய அரசு தன்னிச்சையாக சிபிஐ இயக்குநரை பதவி நீக்கம் செய்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் செயல் என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரபேல் போர் விமான ஊழல் குறித்து விசாரிக்க இருந்த நிலையில் மத்திய அரசு அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக ராகுல் கூறியுள்ளார்.
பாரதிய ஜனதா அரசின் ஊழல் வெளி வந்து விடுமோ என பிரதமர் மோடி பயப்படுகிறாரா? என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னிச்சையாக செயல்படக்கூடிய சிபிஐ-யும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கு கொள்ள நினைக்கும் மத்திய பாஜக அரசின் தந்திரத்தை இதன் மூலம் ராகுல்காந்தி வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
Discussion about this post