ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள கீரி என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது மறைந்து இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட துவங்கினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் கடுமையான பதிலடி கொடுத்தனர்.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post